search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியர்கள் மீட்பு"

    பாரசீக வளைகுடா கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் உயிருக்கு போராடிய 12 இந்தியர்களை பிரான்ஸ் நாட்டு கடற்படை வீரர்கள் மீட்டு, காப்பாற்றியுள்ளனர். #12Indiansrescued #sinkingvessel #PersianGulf #Frenchnavyship
    புதுடெல்லி:

    இந்திய பெருங்கடலில் பாரசீக வளைகுடா பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான கடற்படை கப்பல் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் மூழ்கி கொண்டிருந்த ஒரு கப்பலில் இருந்து அபாய அழைப்பு வருவதை கடற்படையினர் கவனித்தனர்.

    இரு விமானிகள், ஒரு நீச்சல் வீரர், மற்றும் ஹெலிபேட் இயக்குபவர் ஆகியோருடன் 7 கடல் மைல்கள் தூரத்தில் அழைப்பு வந்த இடத்தை நோக்கி ஒரு ஹெலிகாப்டர் அனுப்பி வைக்கப்பட்டது. 

    அட்லான்டிக் பெருங்கடல் மற்றும் கரிபியன் கடலுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள இரட்டை தீவு நாடான செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் நாட்டுக்கு சொந்தமான ‘தர்பார் குயீன்’ என்னும் சரக்கு கப்பல் முற்றிலுமாக மூழ்கிய நிலையில் அதில் இருந்த சிலர் கப்பலின் மேல் பகுதியில் தொற்றியவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை மீட்பு படையினர் கவனித்தனர்.

    உடனடியாக கடலின் மீது மிதவை ஹெலிபேட் அமைத்து மூழ்கிய கப்பலின் நுனிப்பகுதியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரை முதல்கட்டமாக மீட்டனர். அவர்களை அவ்வழியாக வந்த ஒரு வர்த்தக கப்பலில் இறக்கிவிட்டு மீண்டும் மூழ்கிய கப்பலுக்கு சென்றனர்.

    இரண்டாவது கட்டமாக 4 பேரையும், மூன்றாவது கட்டமாக 4 பேரையும் பத்திரமாக மீட்டு, அருகாமையில் உள்ள பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான கஸார்ட்ஸ் என்ற கப்பலுக்கு கொண்டு வந்தனர். மீட்கப்பட்ட 12 பேரும் இந்தியர்கள் என தெரிய வந்துள்ள நிலையில் அவர்களில்  சிறு காயங்களுடன் இருந்தவர்களுக்கு அந்த கப்பலில் இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர், அவர்கள் 12 பேரும் பிரிட்டன் நாட்டு சொகுசு கப்பலான ‘சீ பிரின்சஸ்’ மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேற்கண்ட தகவல் டெல்லியில் உள்ள பிரான்ஸ் நாட்டின் தலைமை தூதரகம் இன்று வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. #12Indiansrescued #sinkingvessel #PersianGulf #Frenchnavyship
    மானசரோவர் யாத்திரைக்கு சென்று வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 1430 இந்திய யாத்ரீகர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. #KailashMansarovar #KailashMansarovarpilgrims #Nepalpilgrimsevacuation
    காத்மாண்டு:

    நேபாளம் நாட்டின் மேற்கு பகுதியில் பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்தியாவில் இருந்து மானசரோவர் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் சிக்கி கொண்டனர்.

    குறிப்பாக, ஹில்ஸா மற்றும் சிமிகோட் மாவட்டத்தில் சிக்கி தவித்த அவர்களை மீட்கும் பணியில் நேபாள நாட்டின் விமானப்படை மற்றும் தனியாருக்கு சொந்தமான விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.



    கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற மீட்புப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தது. கடைசியாக 160 பேர் கொண்ட குழுவினர் இன்று மீட்கப்பட்டதாகவும், மீட்கப்பட்ட 1430 யாத்ரீகர்களும் நேபாளத்தில் உள்ள இந்திய எல்லையோர நகரங்களான நேபாள்கஞ்ச் மற்றும் சுர்கேட் நகரங்களில் கொண்டு சேர்க்கப்பட்டனர்.

    அவர்களுக்கு உதவி செய்வதற்காக நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என இங்குள்ள இந்திய தூதரகம் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KailashMansarovar   #KailashMansarovarpilgrims #Nepalpilgrimsevacuation
    மானசரோவர் யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய மேலும் 275 இந்தியர்கள் நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    காத்மண்டு:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஹில்சா பகுதியில் சிக்கித் தவித்த இந்திய பக்தர்கள் மேலும் 275 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இது தொடர்பாக நேபாள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 3 நாள்களில் மட்டும் இந்திய பக்தர்கள் 675 பேர் ஹில்சாவில் இருந்து சிமிகோட் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த 3 நாள்களில், மீட்புப் பணியில் 53 சிறிய விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஹெலிகாப்டர்களும் 142 முறை ஈடுபடுத்தப்பட்டது. ஹில்சா, சிமிகோட்டுக்கு இடையே தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது என் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    மானசரோவர் யாத்திரை சென்று நிலச்சரிவில் சிக்கிய 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #Mansarovar #PilgrimsRescue
    காத்மண்டு:

    மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்ட இந்திய பக்தர்கள் 1,500 பேர் நேபாளத்திலும், சீனாவின் திபெத்திய பகுதியிலும் மோசமான வானிலை காரணமாக பரிதவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் இந்திய பக்தர்களை மீட்க பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு வழங்கும் என பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்றபோது நிலச்சரிவில் சிக்கித் தவித்த 250 இந்தியர்களை நேபாளத்தின் ஹில்சா மலைப்பகுதியில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், நேபாளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையிலும், நேபாள்கஞ்ச் - சிமிகோட் - ஹில்சா மலைப்பகுதியில் சிக்கியிருந்த 250 இந்தியர்கள் ஹெலிகாப்டர்கள் மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

    மத்திய அரசின் நடவடிக்கையால் நேபாள அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Mansarovar #PilgrimsRescue
    ×